Posts

Showing posts from February, 2018

தலையோட விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் இல்லையாம்

Image
சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பின் அவர் விலகி விட்டார். அதனால் விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் "ட்விட்டரில் நான் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கிறேன் என்று வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அஜித்தின் ரசிகன். நான் எதிர்காலத்தில் அஜித் படங்களுக்கு தீவிரமான பின்னணி இசை கொடுப்பேன். விரைவில் சில நல்ல தகவல்கள் என்னிடம் இருந்து வரும்" என கூறியுள்ளார். உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும் 🙏🙏🙏🙏

விசுவாசம் கெட்டப்பில் மகள் அனோஷ்கா பள்ளிக்கு வந்த அஜித்... வைரலாகும் புகைப்படம்...!

Image
விசுவாசம் கெட்டப்பில் மகள் அனோஷ்கா பள்ளிக்கு வந்த அஜித்... வைரலாகும் புகைப்படம்...!                     தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தில் இளமையான தோற்றத்தோடு நடிக்கிறார். மேலும் தொடர்ந்து இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அண்மை காலமாக அஜித் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் அவர் பெப்பர் சால்ட் தலைமுடியுடன் நடித்தார். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை... கரு கரு முடியுடன் கலக்கும் தாதா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மகள் பள்ளியில் அஜித் : இந்நிலையில், அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவின் பள்ளி விழா ஒன்றில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் கலந்துக் கொண்டுள்ளார் அதுவும் விசுவாசம் படத்தின் கெட்டப்பில். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் அந்த பள்ளி வளாகத்தில் கூடி இருந்த அஜித் ரசிகர்கள் பலர் அஜித்தை சந்தித்து புகைப...