தலையோட விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் இல்லையாம்
சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பின் அவர் விலகி விட்டார். அதனால் விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் "ட்விட்டரில் நான் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கிறேன் என்று வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அஜித்தின் ரசிகன். நான் எதிர்காலத்தில் அஜித் படங்களுக்கு தீவிரமான பின்னணி இசை கொடுப்பேன். விரைவில் சில நல்ல தகவல்கள் என்னிடம் இருந்து வரும்" என கூறியுள்ளார்.
உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும் 🙏🙏🙏🙏

Comments
Post a Comment